உருவாகிறது புதிய புயல்: கனமழைக்கு வாய்ப்பு

 
niver cyclone

தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென வங்க கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இதனை அடுத்து தெற்கு வடக்கு ஆந்திர பகுதிகளில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web