பலாப்பழம் சாப்பிட்டால் கொரோனா வராதா? மீண்டும் கிளம்பிய வதந்தி

மது அருந்தினால் கொரோனா வைரஸ் ஆகாது என்றும் கொடுக்காப்புளி நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்றும் ஏற்கனவே வதந்தி பரவிய நிலையில் தற்போது புதிதாக பலாப்பழம் மற்றும் பலா கொட்டைகளை சாப்பிட்டால் கூட கொரோனா தாக்காது என்ற வதந்தி கிளம்பியுள்ளது இதனை அடுத்து பழங்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பலா விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தாலும் பலாபழம் அல்லது பலாக்கொட்டை சாப்பிட்டால் கொரோனா தாக்காது என்பதற்கு எந்தவிதமான அறிவியல்
 
பலாப்பழம் சாப்பிட்டால் கொரோனா வராதா? மீண்டும் கிளம்பிய வதந்தி

மது அருந்தினால் கொரோனா வைரஸ் ஆகாது என்றும் கொடுக்காப்புளி நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்றும் ஏற்கனவே வதந்தி பரவிய நிலையில் தற்போது புதிதாக பலாப்பழம் மற்றும் பலா கொட்டைகளை சாப்பிட்டால் கூட கொரோனா தாக்காது என்ற வதந்தி கிளம்பியுள்ளது

இதனை அடுத்து பழங்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பலா விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தாலும் பலாபழம் அல்லது பலாக்கொட்டை சாப்பிட்டால் கொரோனா தாக்காது என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் கோழிகளின் மூலம் பரவுவதாக வதந்தி கிளம்பியதால் கோழிக்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது பலா சாப்பிட்டால் கொரோனா தாக்காது என்பதால் தற்போது பலா பழத்தின் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web