ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

 
ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் திங்கள் முதல் அதாவது ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பில் பின்வருமாறு

* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை 

* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடன்களையும் உரிய வழிமுறைகளுடன் வழக்கம்போல் செயல்படலாம். 

* சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை

* அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும்

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை 

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி

* இறுதி ஊர்வலம் மற்றும் அதைச்சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி 

* ஐடி ஊழியர்கள் 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து கண்டிப்பாக பணி செய்ய வேண்டும்  

From around the web