வாட்ஸ் அப் போலவே புதிய செயலி: பிளஸ் டூ மாணவருக்கு அமைச்சர் பாராட்டு

 

உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயல்களில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. இது பொழுதுபோக்கு மெசஞ்சர் ஆக மட்டுமின்றி பல்வேறு டாக்குமென்ட்களை அனுப்பும் வகையில் தொழில் ரீதியில் உதவி செய்யவும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் வாட்ஸ்அப்பை மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இருப்பினும் வாட்ஸ் அப் போலவே மேலும் பல செயலிகள் வந்தாலும் வாட்ஸ்அப்க்கு இணையாக எதுவுமில்லை என்று பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் போலவே ’செக்யூர் மெசஞ்சர்’ என்ற புதிய செயலியை தனது முதல் முயற்சியிலேயே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சஞ்சய்குமார். இவர் தான் ’செக்யூர் மெசஞ்சர்’ என்ற செயலியை உருவாக்கி உள்ளார். இவருக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது

#WhatsApp போலவே #SecureMessenger என்ற புதிய செயலியை தன் முதல் முயற்சியிலேயே உருவாக்கியிருக்கும், கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சஞ்சய்குமாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் பல சாதனைகள் புரிந்து தாய் மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள்! 

From around the web