நடிகர் விஜய் வசந்துக்கு புதிய பதவி: தேர்தலில் போட்டியா?

பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி எம்பி ஆகவும் இருந்த வசந்தகுமார் அவர்கள் சமீபத்தில் கொரோனால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். இருப்பினும் வேறு பல உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உடன் சேர்த்து கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அந்த தேர்தலில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் வசந்துக்கு புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
நடிகர் விஜய் வசந்த் தமிழக காங்கிரசில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார் என்றும் அவரது வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் அல்லது சட்டமன்ற தேர்தலில் விஜய் வசந்துக்கு கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன