புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம்: கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் கண்டனம்!

 
vijay vasanth

மத்திய அரசு புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த சட்டத் திருத்தத்திற்கு திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், இயக்குனர்கள் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ராஜூமுருகன் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் 

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் படைப்பாளர்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக மட்டுமே திரைப்படம் எடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் தனது கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

ஒளிப்பதிவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் என்பது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் அரசாங்கத்தின் ஊடுருவலாகும். இது கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுதந்திரமான பேச்சு ஆதரவாளர் என்ற வகையில், முன்மொழியப்பட்ட இந்த திருத்தங்களை கைவிடுமாறு மையத்தை கேட்டுக்கொள்கிறேன்.


 

From around the web