காலையில் நெகட்டிவ், மதியம் பாசிட்டிவ்: நெல்லை இளைஞருக்கு நேர்ந்த சோதனை

 
காலையில் நெகட்டிவ், மதியம் பாசிட்டிவ்: நெல்லை இளைஞருக்கு நேர்ந்த சோதனை

நெல்லையை சேர்ந்த இளைஞருக்கு காலையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்த நிலையில் மதியம் நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் என வந்ததால் குழப்பம் ஏற்பட்டது 

நெல்லையை சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகம் அடைந்ததால் கடந்த 23ஆம் தேதி காலை 11 மணிக்கு தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து உள்ளார். அங்கு அவருக்கு நெகட்டிவ் என சோதனையின் முடிவு வந்துள்ளது 

corona

ஆனால் அந்த முடிவில் அதிருப்தி அடைந்த் அவர் அன்றைய தினமே மதியம் ஒரு மணி அளவில் நெல்லை பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் நெகட்டிவ் பரிசோதனை மேற்கொண்டபோது அங்கு அவருக்கு பாசிட்டிவ் என தெரியவந்து உள்ளது 

இதில் குழப்பம் அடைந்த அவர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது அரசு சார்பில் எடுக்கப்படும் பரிசோதனை முடிவு தான் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

From around the web