நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவிக்கு ஜாமீன். ஆனால்…..

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யா உட்பட ஒரு சில மாணவர்களும் அவர்களின் தந்தையார்களும் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவரும் கைது தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது மட்டுமின்றி தனது சான்றிதழிலும் திருத்தம் செய்துள்ளார். இதற்கு அவரது தாயாரும் உடந்தை என விசாரணையில் தெரிய
 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவிக்கு ஜாமீன். ஆனால்…..

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யா உட்பட ஒரு சில மாணவர்களும் அவர்களின் தந்தையார்களும் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவரும் கைது தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது மட்டுமின்றி தனது சான்றிதழிலும் திருத்தம் செய்துள்ளார். இதற்கு அவரது தாயாரும் உடந்தை என விசாரணையில் தெரிய வந்தது

இதனையடுத்து மாணவிவும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மாணவியை மட்டும் ஜாமீனில் விடுவிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மாணவியின் தாயார் மைனாவதி ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் அவர் இன்னும் சிறையில் உள்ளார்.

From around the web