மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நாசர் மனைவி நீக்கம்

 
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நாசர் மனைவி நீக்கம்

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நாளிலிருந்தே அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருந்து வருபவர் கமீலா நாசர். இவர் சமீபத்தில் சொந்த காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாகவும் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

kameela

இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டல பதவியை வகித்து வந்த திருமதி கமலா நாசர் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது

kameela

From around the web