மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு: அதிர்ச்சி தகவல்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு ராஜமலை உள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர் தங்கியிருந்த குடியிருப்பின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து சென்ற தொழிலாளர்கள் இருந்தனர் என்றும் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதால் இந்த குடியிருப்பில் 40 குடும்பத்தை சேர்ந்த 80 கதி என்ன
 

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு ராஜமலை உள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர் தங்கியிருந்த குடியிருப்பின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து சென்ற தொழிலாளர்கள் இருந்தனர் என்றும் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதால் இந்த குடியிருப்பில் 40 குடும்பத்தை சேர்ந்த 80 கதி என்ன ஆயிற்று என்ற கவலை அனைவர் மனதிலும் எழுந்தது

கடந்த 5 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்வதால் தொழிலாளர்கள் வீட்டிலேயே மூடங்கியிருந்தனர் என்றும், மழை காரணமாக 4 நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் யாரிமும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும்,முதலிம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கடந்த மூன்று நாட்களாக ராஜமலை பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணியில் தீவிரமாக இருந்த நிலையில் தினந்தோறும் உடல்கள் மீட்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என தெரிகிறது. மேலும் இன்று மட்டும் 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்கிறது

From around the web