மாணவர்களுக்கு மாதந்தோறும் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 
exam

மாணவர்களுக்கு மாதம்தோறும் அலகுத் தேர்வு வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,12ஆம் வகுப்புக்ளின் பொதுத் தேர்வுகளும் மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடத்தப்படவில்லை என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இதே நிலை நீடிக்குமானால் இந்த ஆண்டும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் அலகுத் தேர்வு வைப்பதற்கு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வுகள் வைக்கப்படும் என்றும் அந்த தேர்வுகளில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இருப்பினும் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக இந்த அலகுத் தேர்வு அவசியமாக கருதப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

From around the web