ஒரே மாதிரியான தளர்வுகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா?

 
stalin

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என்று செய்திகள் கசிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பதும், கொரோனா தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் கூட தற்போது வெகுவாக குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா குறைந்துள்ளதை அடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக கோவை ஈரோடு திருப்பூர் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களில் உள்ள தளர்வுகளை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

தமிழகத்தின் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகை மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே

From around the web