ம.நீ.ம வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு: பிரச்சாரம் செய்வாரா?

 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அக்கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுபவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. இவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

corona

இந்த நிலையில் திடீரென இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் வேளச்சேரி தொகுதி மக்களிடம் டிஜிட்டல் மூலம் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு தனக்கு வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web