குடியரசு தலைவரை சந்திக்கும் திமுக தலைவர்: பரபரப்பு தகவல்!

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி வந்தது என்பது தெரிந்ததே சுமார் இரண்டு கோடி மக்களுக்கும் மேலானவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ள நிலையில் இந்த கையெழுத்துக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் ஒப்படைக்க திமுக திட்டமிட்டுள்ளது இதனை அடுத்து இந்த இரண்டு கோடி கையெழுத்துக்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டதாகவும் வரும் 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் அவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்
 
குடியரசு தலைவரை சந்திக்கும் திமுக தலைவர்: பரபரப்பு தகவல்!

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி வந்தது என்பது தெரிந்ததே

சுமார் இரண்டு கோடி மக்களுக்கும் மேலானவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ள நிலையில் இந்த கையெழுத்துக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் ஒப்படைக்க திமுக திட்டமிட்டுள்ளது

இதனை அடுத்து இந்த இரண்டு கோடி கையெழுத்துக்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டதாகவும் வரும் 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் அவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒப்படைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

கடந்த மாதம் வெளிவந்த இந்த சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web