குண்டுராவ் சந்தித்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட முக ஸ்டாலின்: ரிசல்ட் என்ன?

 

சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் குண்டு ராவ் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததோடு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தார் 

இந்த நிலையில் சமீபத்தில் குண்டுராவ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும்கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர் 

அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் குண்டுராவை சந்தித்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். சற்றுமுன் திமுக முக ஸ்டாலின் அவர்களின் கொரோனா பரிசோதனை ரிசல்ட் வந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது. எனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

இதேபோல் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என்பதும் அதற்கான ரிசல்ட்டுகள் விரைவில் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web