பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை: இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்பு தானா?

தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்பு முடியும் வரை, பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டு முழுவதுமே ஆன்லைன் வகுப்புகள் தானா என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கவில்லை. எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும் உறுதியான தகவல் அரசிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
 
பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை: இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்பு தானா?

தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்பு முடியும் வரை, பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டு முழுவதுமே ஆன்லைன் வகுப்புகள் தானா என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கவில்லை. எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும் உறுதியான தகவல் அரசிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து அளித்த பேட்டியில் கூறியபோது, ‘தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பது குறித்து எங்களுக்கு அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்

ஆனால் பள்ளிகளை இப்போதைக்கு திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் கொரோனா சூழ்நிலையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு இருக்கும் வரை பள்ளிகளை திறக்க முடியாது. கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும்’ என்று கூறினார்,

மேலும் அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், எல்லோருக்கும் பள்ளிகள் தொடங்கும் முன் புத்தகம் வழங்கப்படும் என்றும், வீட்டில் இருந்து படிக்க வசதியாக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

From around the web