அமைச்சர் எம்.சி சம்பத்தின் சம்மந்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

சமீபத்தில் கூட திமுக திருவண்ணாமலை வேட்பாளர் எ.வ.வேலு என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திமுக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமுகர், திமுக. மதிமுக பிரமுகர்களின் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

mc sampath

இந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியான அதிமுக அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அமைச்சர் எம்சி சம்பத் அவர்களின் சம்பந்தி இளங்கோவன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்

தர்மபுரியில் இளங்கோவன் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பதும் இதனை அடுத்து வரி முறைகேடு செய்ததாக வந்த புகாரை அடுத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எதிர்க்கட்சி பிரமுகர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடந்த நிலையில் தற்போது ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரது உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web