அனிதா டுவிட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

 

அனிதா பேசியது போன்ற வீடியோ ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அந்த டுவிட்டர் பதிவிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தற்போது திடீர் பல்டி அடித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த 2017ஆம் ஆண்டில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதா பேசியது போன்ற ஒரு வீடியோவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவு செய்தார்.

anitha

அந்த வீடியோவில் அனிதா அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் கருத்துக்கள் இருந்தன. இதனை அடுத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அவர் பதிவு செய்த வீடியோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார் 

இந்த நிலையில் தற்போது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திடீரென பல்டி அடித்துள்ளார். எனது அனுமதி இல்லாமலேயே என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டது என்றும் அதில் பதிவான வீடியோவுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் டெலிட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web