தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்!

 
corona

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மே மாத தொடக்கத்தில் அதிகமாகி இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக அரசு பதவி ஏற்ற பின்னர் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு ஆகியவை காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 26 ஆயிம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் படிப்படியாக குறையும் என்ற மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனைகளில் தற்போது ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள் இல்லை என்றும் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதே ரீதியில் சென்றால் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் வேகமாக ஏறிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விட கொரோனாவில் இருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

From around the web