கொரோனாவுக்கு ஆப்பு? அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

 
subramanian

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்கும் அதிமுக ஆட்சியில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திமுக ஆட்சியில் அதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

அதிமுக ஆட்சியின்போது தினமும் 60 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டதாகவும் ஆனால் தற்போது சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பை அனைத்து பகுதிகளிலும் குறைந்து வருவதை அடுத்து கொரோனாவுக்கு ஆப்பு வைத்து விட்டதாகவே கருதப்படுகிறது.

From around the web