தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு உண்டா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 
exam

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக நேற்று பிரதமர் மோடி அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 

இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்த அறிவிப்பை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் செய்தியாளர் சந்திப்பில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு வருவதாகவும் அதன் பின்னர் இரண்டு நாட்களில் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்

மேலும் மத்திய அரசு நடத்திய அனைத்து கல்வி அமைச்சர் கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன என்றும் ஆனால் சிபிஎஸ்சி தேர்வை திடீரென மத்திய அரசு ரத்து செய்து விட்டதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து இரண்டு நாள் கழித்து தெரியும் என்பது அமைச்சரின் பேட்டியிலிருந்து தெரியவந்துள்ளது.

From around the web