நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது? அமைச்சர் தகவல்

 
gold loan

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் பெரியசாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார் 

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது தெரிந்ததே. கடந்த ஒரு மாத ஆட்சியில் திமுக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதும், தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி எப்போது என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியது ஐந்து சவரன்களுக்கு மிகாமல் உள்ள நகை கடன் தள்ளுபடி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து அரசாணை மிக விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார் அமைச்சர் பெரியசாமி அவர்களின். இந்த தகவல் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது

From around the web