தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

 
rain

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாகி வரும் நிலையில் தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web