13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

 
meteorological

சென்னை வானிலை ஆய்வு மையம் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரு பக்கம் தென் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளக்காடாக உள்ளது என்பதும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருகி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல் வட மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் 13 மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை திருச்சி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என்றும் அதனால் இந்த மாவட்டத்தில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

குறிப்பாக 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web