ஜனவரி முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம்: கலைவாணர் அரங்கத்திலா?

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக நடைபெறும் இடத்தில் நடைபெறாமல், கலைவாணர் அரங்கில் நடந்தது என்பது குறிப்பிடதக்கது 
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தனிமனித இடைவெளியுடன் அமைந்து கூட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனிமனித இடைவெளியை பேணும் வகையில் சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

assembly

இந்த நிலையில் தற்போது மீண்டும் சட்டசபை கூட்டம் கூடும் தகவல் வந்துள்ளது. வரும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் சென்னை கலைவாணர் அரங்கில் தான் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூட்டத்தொடரை மூன்று நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஏற்கனவே விவசாயிகள் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த காரசாரமான விவாதங்கள் இந்த மூன்று நாள் சட்டசபை கூட்டத்தொடரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டப்பேரவை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதை போல் அந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்க ஆளுங்கட்சியும் தயாராகி வருகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது

From around the web