நடுவானில் நடந்த திருமணம்: விமான ஊழியர்களை இடைநீக்கம் செய்த நிர்வாகம்!

 
flight marriage

மதுரையில் விமானம் ஒன்றில் நடுவானில் திருமணம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விமானத்தை சேர்ந்த ஊழியர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது அதைவிட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மதுரை கோரிப்பாளையத்தில் மரக்கடை அதிபர் ராகேஷ் என்பவரின் மகள் தீக்சனா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்பிய திருமண வீட்டார் தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் மணமகன், மணமகள் உள்பட 160 பேர்களுடன் மதுரையிலிருந்து தூத்துக்குடி அந்த விமானம் பறந்தது

flight marriage

விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவானில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். விமானத்தில் இருந்த உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web