மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு!

 

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தலில் போட்டி இல்லை என சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சீமானின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த மன்சூர் அலிகான் அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். ஆனாலும் தேர்தல் ஆணையத்தில் அவரது கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்பதால் சுயேச்சையாக போட்டியிடுகிறார் 

mansoor

சமீபத்தில் அவர் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென தான் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தான் எதிர்க்கட்சிகளிடம் பணம் வாங்கி விட்டதாக வதந்தி பரப்பினார்கள் என்றும் அதனால் வருத்தத்துடன் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் தற்போது மீண்டும் நான் போட்டியிடுகிறேன் என்றும் போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது மகள் தனக்கு ஊக்கம் கொடுத்தார் என்றும் அதனால் தான் மீண்டும் போட்டியிடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web