இன்று முதல் இ-பதிவு கட்டாயம்: மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் கவனிக்க!

 
இன்று முதல் இ-பதிவு கட்டாயம்: மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் கவனிக்க!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய வேண்டும் என்றால் இன்று முதல் இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. eregister.tnega.org என்ற இணையதளத்திற்கு சென்று மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் பதிவு செய்துகொண்டு இ-பதிவு எடுத்துக்கொண்டு மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

epass

இந்த இ-பதிவு இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் eregister.tnega.org என்ற இணையதளத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும் அந்த இடைப்பட்ட காலத்தில் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு மட்டுமின்றி இ-பதிவு செய்யும் இணையதளத்திற்கு ஊரடங்கா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது


 

From around the web