அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அடித்தது லக், முக ஸ்டாலினை அடுத்து முதல்வரின் அறிவிப்பு!

 

எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தமிழக அரசின் மசோதா காரணமாக 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மேலும் ஒரு லக் அடித்துள்ளது. மருத்துவ கல்லூரியில் சேரவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தாங்கள் ஏற்று கொள்வதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள்  சற்றுமுன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதல்வர் மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

stalin

7.5% அடிப்படையே அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு மாணவர்களின் கல்வி கட்டணத்தை மட்டுமின்றி விடுதி கட்டணம் உள்பட அனைத்து கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி  கல்வி உதவி தொகை செலுத்த அனுமதி வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுழல் நிதியை உருவாக்க தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 

இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது மட்டுமன்றி கல்வி கட்டணம் இலவசமாகக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web