புத்தகத்தை பார்த்தும், இணையதளத்தை பார்த்தும் தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு!

 
புத்தகத்தை பார்த்தும், இணையதளத்தை பார்த்தும் தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு!

புத்தகத்தை பார்த்தும், இணையதளத்தை பார்த்தும், தேர்வுகளை எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் புதிய முறையில் தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது

anna

இதன்படி கேள்விகளுக்கான பதில்களை புத்தகத்தைப் பார்த்தும் இணையதளத்தை பார்த்து எழுதலாம் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் ஒருவரி கேள்வியாக இல்லாமல் பலவரிகளில் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முறை மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web