27 மாவட்டங்களில் அனுமதி: ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகளும் இயங்கும்!

 
buses

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவிப்பு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று பல தளர்வுகளை வழங்கிய நிலையில் தற்போது மாவட்டங்களுக்கு இடையே தொலைதூர பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது 

இதன்படி ஜூன் 28-ஆம் தேதி முதல் தொலை தூர பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 27 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் 50% பயணிகளுடன் தொலைதூர பேருந்துகள் இயங்கும் என்றும் அறிவித்துள்ளது

அரசு விரைவு பேருந்து அதன் சார்புடைய பேருந்துகள் போக்குவரத்து கழகங்கள் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையையும் வெளியேயும் தொலைதூர பேருந்துகள் இயங்கும் என்றும் பேருந்துகள் இயங்கும் மாவட்டங்களின் பெயர்கள் பின்வருமாறு:  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

From around the web