ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி: முதல்வர் ஸ்டாலின் உரையால் மக்கள் நிம்மதி

 
stalin

விரைவில் ஊரடங்கிற்கு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உரையாற்றியுள்ளார் 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஜூன் 7-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நீடிக்குமா என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சற்று முன் பொது மக்களுக்கு உரையாற்றிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் விரைவில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்தார் 

ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என்றும் மக்கள் ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் கண்டிப்பாக ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் பொதுமக்கள் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான் என்றும் அதனால்தான் ரூபாய் 4000 நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

மேலும் முதல் அலையை அன்றைய அரசு கட்டுப்படுத்த தவறியதால் தான் தற்போது இரண்டாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டாவது அலை தமிழகத்தின் பொருளாதாரத்திற்கும் மருத்துவ கட்டமைப்பிற்கும் நெருக்கடியை கொடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web