உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: உடனே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்

 
election

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையம் சற்றுமுன் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த தேர்தலுக்கான முழு விவரங்கள் இதோ:

வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் 

மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 

வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 

வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 

அக்டோபர் 6 மற்றும் 9 களில் வாக்குப்பதிவு

அக்டோபர் 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்

மேலும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் ஒன்பது மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

From around the web