விடுதலை செய், விடுதலை செய், எடப்பாடியை விடுதலை செய்: திமுகவினர் போராட்டம்!

 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் என்பதும் அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே 

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருவாரூர் உள்பட பல மாவட்டங்களில் திமுகவினர் போராட்டம் செய்தனர்/ ஒரு சில மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பதும் உதயநிதியை விடுதலை செய்கின்ற கோஷமிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

eps

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் ’விடுதலை செய் விடுதலை செய் உதயநிதியை விடுதலை செய்’ என்று கூறுவதற்கு பதிலாக ’விடுதலை செய் விடுதலை செய் எடப்பாடியை விடுதலை செய்’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எதற்காக போராட்டம் நடத்துகிறோம் என்று தெரியாமலேயே திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தியதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web