என் வீட்டில் ரெய்டு நடத்துங்கள் பார்ப்போம்: உதயநிதியை அடுத்து சீமான் சவால்

 

முடிந்தால் என் வீட்டில் வருமான வரி சோதனை செய்யுங்கள் என சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதே போன்ற ஒரு சவாலை விடுத்துள்ளார் 

சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் அவர் பிரச்சாரம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’வருமானவரித் துறை உள்ளிட்ட ஐந்து அமைப்புகளை மோடி தனது ஐந்து விரல்களை போல் பயன்படுத்தி வருகிறார் என்றும் வருமான வரித்துறையினர் வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார் என்றும் கடைசி ஆயுதமாக ஐடி ரெய்டை அவர் பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்

seeman

மேலும் ‘ஏன் என் வீட்டில் ஒரு முறை ரெய்டு நடத்தி பாருங்கள் பார்ப்போம் என்றும் அவர் சவால் விட்டார். மேலும் நகை மற்றும் விவசாய கடன்களை ஓராண்டுக்கு முன்பே தள்ளுபடி செய்து இருக்கலாம் ஆனால் தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள் ஆக இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் கூறிய சீமான், தேர்தல் கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகளாக உள்ளன என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் சீமான் கூறினார்

From around the web