4500க்கும் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு: சென்னையிலும் குறைவு!

 

தமிழகத்தில் தொடர்ந்து 5,000க்கும் அதிகமாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மட்டும் 5000க்கும் கீழ் ஒருநாள் கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த வகையில் இன்று ஒருநாள் மட்டும் 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 5,083 என்றும், ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 52 என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் கொரோனா மொத்த எண்ணிக்கை 6,70,392 என்றும், தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6,17,403 என்றும், தமிழகத்தில் கொரோனா மொத்த உயிரிழப்பு  10,423 என்றும், தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் அதாவது தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42,566 என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

சென்னையில் இன்று மட்டும் 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், கோவையில் இன்று ஒருநால் மட்டும் 389 பேருக்கு தொற்று உறுதி என்றும், சேலத்தில் மேலும் 274 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,844 என்பதும், இதுவரை மொத்தம் 83,40,674 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web