இந்தியாவில் 3.5 லட்சத்திற்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு

 
இந்தியாவில் 3.5 லட்சத்திற்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்து வரும் நிலையில் தற்போது அந்த பாதிப்பு மூன்று இலட்சத்திற்கும் குறைந்துள்ளது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதை அடுத்து தினமும் நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

corona

இந்த நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கொரனோ வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சற்று முன் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 343,144 என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் பலியாகி உள்ளனர் என்றும் மொத்தமாக இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 262,317 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனாவால் பாதித்து 37,04,893 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

From around the web