போட்டியில் இருந்து விலகுகிறேன்: திடீரென அறிவித்த தமிழ் நடிகர்!

 

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து திடீரென விலகிக் கொள்வதாக தமிழ் நடிகர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வரும் சட்டமன்ற தேர்தலில் திரையுலகினர் பலர் போட்டியிட்டு வரும் நிலையில் அவர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். புதிய கட்சி ஒன்றை சமீபத்தில் ஆரம்பித்திருந்தாலும் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நேரம் இல்லை என்றும் அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் நடிகர் மன்சூரலிகான் தெரிவித்திருந்தார்

இதனை அடுத்து கோவை தெற்கு தொகுதியில்  தான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அங்கே கமல்ஹாசன் போட்டியிடுவதால், அந்த தொகுதியை தான் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் இதனை அடுத்து தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அவர் தெரிவித்தார்

mansoor

சமீபத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது வேட்புமனு ஏற்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக நடிகர் மன்சூரலிகான் அறிவித்துள்ளார் 

இன்று அறிவித்த அறிவிப்பு ஒன்றில் சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. நான் பணம் வாங்கி விட்டதாக என் மீது விமர்சனம் எழுவதால் இந்த தேர்தலில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

From around the web