கிளம்பியது புயல்: புதிய காற்றழுத்த தாழ்வால் பரபரப்பு

 
niver cyclone

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாக ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால்  கடலில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web