வீட்டுக்கு வந்த ரஜினிக்கு திருஷ்டி சுத்தி போட்ட லதா: வைரலாகும் புகைப்படம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று மாலை ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் ஒன்றில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் அங்கு தயாராக இருந்த காரில் ஏறி அவர் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்

போயஸ் தோட்டத்தில் வழிநெடுகிலும் ரசிகர்கள் அவரை கையசைத்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரில் இருந்தவாறே ரசிகர்களுக்கு தனது நன்றியை ரஜினிகாந்த் தெரிவித்துக் கொண்டார் 

rajini

இந்த நிலையில் ரஜினிகாந்த் வீட்டின் உள்ளே நுழையும் போது அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் அவருக்கு திருஷ்டி சுற்றி போட்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரஜினி நல்லபடியாக குணமடைந்து வீடு திரும்பியதற்கு ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் நின்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web