‘அட லூசு பசங்களா?’ ரஜினி எதிர்ப்பாளர்களை போட்டு தாக்கிய பிரபல நடிகை

ரஜினியுடன் நடிப்பதால் தான் ரஜினிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரபல நடிகைக்கு சமூக வலைதள பயனாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ’அட லூசு பசங்களா’ என்று அந்த நடிகை பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெரியார் குறித்து தான் எதுவும் அவமரியாதையாக பேசவில்லை என்றும் உண்மையைத்தான் பேசியதாகவும் ரஜினிகாந்த் இன்று காலை பேட்டி அளித்தார். இந்த பேட்டி குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான
 

‘அட லூசு பசங்களா?’ ரஜினி எதிர்ப்பாளர்களை போட்டு தாக்கிய பிரபல நடிகை

ரஜினியுடன் நடிப்பதால் தான் ரஜினிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரபல நடிகைக்கு சமூக வலைதள பயனாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ’அட லூசு பசங்களா’ என்று அந்த நடிகை பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெரியார் குறித்து தான் எதுவும் அவமரியாதையாக பேசவில்லை என்றும் உண்மையைத்தான் பேசியதாகவும் ரஜினிகாந்த் இன்று காலை பேட்டி அளித்தார். இந்த பேட்டி குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டரில் ’ரஜினியின் மனதைரியத்தை தான் பாராட்டுவதாகவும் அவர் சொன்ன கருத்து சரியோ தவறோ தான் எடுத்த நிலையில் உறுதியாக இருப்பது பாராட்டுக்கு உரியது என்றும் தெரிவித்திருந்தார்

இதற்கு சமூக வலைதள பயனாளர்கள் ரஜினியுடன் நடிப்பதால் ரஜினிக்கு அவர் ஆதரவு தெரிவிப்பதாக விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த குஷ்பு, ரஜினியுடன் நான் 28 வருடங்களுக்கு முன்பே நடித்துவிட்டேன் இது எனக்கு புதுசு இல்ல அட லூசு பசங்களா ஏன்டா நீங்களே முட்டாள்ன்னு உங்களை உறுதி செய்கிறீர்கள் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web