திமுக வன்முறையை தூண்டுகிறது: காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு புகார்!

 
திமுக வன்முறையை தூண்டுகிறது: காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு புகார்!

திமுக வன்முறையை தூண்டுவதாகவும், திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அங்கு அவர் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

kushboo

இந்த நிலையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த குஷ்பு, திடீரென சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்று, திமுக மீது புகார் அளித்தார். தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவினர் வன்முறையை தூண்டி விடுவதாகவும் இதனால் தன்னால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் வன்முறையை தூண்டும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

மேலும் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த மண்ணில் பிறந்தவர் மட்டும்தான் மண்ணின் மைந்தர்களா என்றும், நானும் இந்த மண்ணின் பெண் தான் நான் கடந்த 35 ஆண்டுகளாக இந்த மண்ணில்தான் வாழ்ந்து வருகிறேன் எனக்கு இந்த மண்ணில் போட்டியிடவும் வெற்றி பெறவும் எனக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web