நகையை வைத்து உதவி செய்த மதுரை சலூன்கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா லாக் டவுனால் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பணம் இல்லையென்று தன் மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த நகைகளை எடுத்து மக்களுக்கு உதவி செய்தவர் மதுரை அண்ணாநகரை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். கடந்த ஒரு மாதத்துக்கு முன் இவரை பற்றிய செய்திகள் மீடியாக்களில் அதிகம் வந்தது. நகையை அடகு வைத்து ரூபாய் 5 லட்சம் அளவில் பொருட்கள் வாங்கி இல்லாத ஏழை எளியோர் அனைவருக்கும் உதவி செய்த மதுரை சலூன் கடைக்காரரை சற்று முன்
 

கொரோனா லாக் டவுனால் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பணம் இல்லையென்று தன் மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த நகைகளை எடுத்து மக்களுக்கு உதவி செய்தவர் மதுரை அண்ணாநகரை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். கடந்த ஒரு மாதத்துக்கு முன் இவரை பற்றிய செய்திகள் மீடியாக்களில் அதிகம் வந்தது.

நகையை  வைத்து உதவி செய்த மதுரை சலூன்கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு

நகையை அடகு வைத்து ரூபாய் 5 லட்சம் அளவில் பொருட்கள் வாங்கி இல்லாத ஏழை எளியோர் அனைவருக்கும் உதவி செய்த மதுரை சலூன் கடைக்காரரை சற்று முன் மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பாராட்டினார். மகளின் திருமண நிகழ்வுக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து ஏழை எளியோருக்காக செலவிட்டதற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

From around the web