கொடநாடு கொலை வழக்கு: சிக்குகிறாரா எடப்பாடி பழனிசாமி!

 
edappadi

கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் மர்மமான கொலை ஒன்று நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு குறித்து ஒரு சிலரிடம் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இந்த கொலையில் சம்பந்தம் உண்டு என்று வாக்குமூலம் கொடுத்த ஒருவர் கூறியுள்ளார் 

இதனை அடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் தன் மீது பழி சுமத்துவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார் 
அரசியல் ரீதியாக தான் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் தன்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத முதல்வர் இந்த கொலை வழக்கில் சிக்க முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார் 

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொடநாடு கொலை கொள்ளை விசாரணையை போலீசார் துவங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

From around the web