முக்கிய பதவியில் இருந்து டி.ஆர்.பாலு நீக்கம்: கே.என்.நேருவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

திமுக முதன்மைச் செயலாளராக கே.என். நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு செய்துள்ளார். இதுவரை இந்த பதவியில் இருந்த டி.ஆர்.பாலு நாடாளுமன்ற குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால் அவர் இந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் கே.என்.நேருவுக்கு தற்போது கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் முக்கிய பதவி கிடைத்துள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
 
முக்கிய பதவியில் இருந்து டி.ஆர்.பாலு நீக்கம்: கே.என்.நேருவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

திமுக முதன்மைச் செயலாளராக கே.என். நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு செய்துள்ளார்.

இதுவரை இந்த பதவியில் இருந்த டி.ஆர்.பாலு நாடாளுமன்ற குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால் அவர் இந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் கே.என்.நேருவுக்கு தற்போது கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் முக்கிய பதவி கிடைத்துள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

From around the web