தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனாவால் பாதிப்பு: பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மாறி மாறி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த செய்திகளை பார்த்து வந்தோம். ஏற்கனவே தமிழகத்தில் 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதில் ஒரு சில அமைச்சர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் முதல் முறையாக தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் கொரோனாவால் பாதிப்பு அடைந்துடுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நாகர்கோவில்
 

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனாவால் பாதிப்பு: பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மாறி மாறி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த செய்திகளை பார்த்து வந்தோம். ஏற்கனவே தமிழகத்தில் 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதில் ஒரு சில அமைச்சர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதல் முறையாக தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் கொரோனாவால் பாதிப்பு அடைந்துடுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் அவர்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 20 எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸால் இன்று மட்டும் சுமார் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவியது மட்டுமின்றி அம்மாவட்ட எம்.எல்.ஏ ஒருவரையே தாக்கியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web