கறுப்பர் கூட்டம் பின்னணியில் திமுக ஐடி விங்? திடுக்கிடும் தகவல்

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் தி.மு.க ஐடி விங்கில் பணியாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலம் என பாஜக பிரபலம் எஸ்.ஜி.சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஹிந்துக் கடவுள்களை திட்டமிட்டு ஆபாசமாக பரப்புரை செய்தது தி.மு.க-வின் நேரடி வேலை என்பது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், மானமுள்ள ஹிந்துக்கள் இப்போதாவது கண்ணை திறக்கட்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகஷ்டி கவசம்
 

கறுப்பர் கூட்டம் பின்னணியில் திமுக ஐடி விங்? திடுக்கிடும் தகவல்

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் தி.மு.க ஐடி விங்கில் பணியாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலம் என பாஜக பிரபலம் எஸ்.ஜி.சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஹிந்துக் கடவுள்களை திட்டமிட்டு ஆபாசமாக பரப்புரை செய்தது தி.மு.க-வின் நேரடி வேலை என்பது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், மானமுள்ள ஹிந்துக்கள் இப்போதாவது கண்ணை திறக்கட்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சன வீடியோ வெளியானது. இந்த வீடியோவால் முருகபக்தர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். இந்து மத ஆதரவாளர்கள் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்தவர்களும் இந்த சேனலுக்கு தங்களது கண்டனத்தை வருகின்றனர்

இந்த விவகாரம் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள் நால்வர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் என்பவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விசாரணையில் கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் தி.மு.க ஐடி விங்கில் பணியாற்றியவர் என்று தெரிய வந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web