ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் காரப்பன். இவர் தான் சார்ந்த நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் சில பொறுப்புகளையும் வகித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு கோவை பீளமேட்டில் திராவிடர் கழக மாநாட்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மிக இழிவாகவும், அத்திவரதரை மிக மோசமாக பேசினார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களை சுற்றி சுற்றி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி எஸ்பியிடம் முதற்கொண்டு ஹிந்து அமைப்புகள்
 

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் காரப்பன். இவர் தான் சார்ந்த நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் சில பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா

கடந்த சில நாட்களுக்கு கோவை பீளமேட்டில் திராவிடர் கழக மாநாட்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மிக இழிவாகவும், அத்திவரதரை மிக மோசமாக பேசினார்.

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களை சுற்றி சுற்றி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி எஸ்பியிடம் முதற்கொண்டு ஹிந்து அமைப்புகள் மனு கொடுத்துள்ளது.

இவர் கடையில் துணிகள் யாரும் வாங்க வேண்டாம் எனவும் பலருக்கு ஹிந்து அமைப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இவ்வளவு பேசிய காரப்பன் தற்போது தலைமறைவாக இருக்கிறார். போலீஸ் இவர் மீது தீவிரம் காட்டி இவரை கைது செய்ய வேண்டும் என மக்கள் பலரிடம் கோரிக்கை வலுக்கிறது.

இவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web