கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் கன்னியாகுமரி இளைஞர்கள்!

 
kanyakumari

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய உறவினர்களே தயக்கம் காட்டி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் பலர் கொரோனாவால் உயிரிழந்தவர்களை தங்களுடைய உயிரைப்பற்றி கூட கவலைப்படாமல் நல்லடக்கம் செய்து வருகின்றனர் 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சேவாபாரதி, இளைஞர் காங்கிரஸ், அனஸ்வரா நிறுவனம் போன்ற அமைப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொரோனா வைரஸ் நேரத்தில் பசியோடு இருக்கும் மக்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் மறுத்தால் உடனடியாக இவர்கள் அந்த இடத்திற்கு சென்று தாங்களே அந்த உடல்களை எடுத்து நல்லடக்கம் செய்து வருகின்றனர் 

இதுவரை சுமார் நூற்றுக்கும் மேலான உடல்களை இறந்த நபர்களின் மதச்சடங்குகளை சரியாக செய்து நல்லடக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா அச்சம் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவினர்களே உடல்களை வீடுகளுக்கு சென்று செல்ல தயங்கி வரும் நிலையில் இந்த தன்னார்வல இளைஞர்களின் சேவை மிகப்பெரிய அளவில் போற்றப்பட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web