காவிரி ஆற்றில் மூழ்கி கன்னியாகுமரி இளைஞர் பரிதாப பலி!

 
river

திருச்சியில் உள்ள காவிரியாற்றில் கன்னியாகுமரி இளைஞா் ஒருவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், எறும்புக்காடு எ. காமராஜ் நகா் காலனி என்ற பகுதியை சோ்ந்த மதுசூதனன் மகன் மகேஷ், , மயிலாடுதுறையைச் சோ்ந்த அந்தோணி பிரின்ஸ், அருண், திருவாரூா் ஆகாஷ், சீா்காழி முரளி, தமிழ்வேந்தன், மதுரை ரஞ்சித் அகையோர் திருச்சி கம்பரசம்பேட்டையில் தங்கி தனியார் கேபிள் பதிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று காலை இவா்கள் அனைவரும் முத்தரசநல்லூா் பகுதியில் உள்ள காவிரியாற்றுக்குச் சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரியை சேர்ந்த மகேஷ் திடீரென காவிரியாற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார் இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மகேஷை மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது மகேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் மகேஷ் சடலத்தை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web